Mahanadhi Serial Today Episode | 31.03.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, கங்காவுக்கு நிச்சயம் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது தட்டு மாற்றும் போது ஒரு குழந்தை அந்த தட்டை தள்ளிவிட்டு மாப்பிள்ளை மடியில் அப்பா என்று கூறி அமர்ந்தது. அதை பார்த்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். சாரதா உடனே பசுபதியை கேள்வி கேட்டார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை எதற்காக மறைத்தார் என்று கேட்டார். ஆனால் பசுபதி சாதாரணமாக அதை சொல்ல மறந்துவிட்டேன் என்று கூறினார். பின் தனியாக அழைத்து, இது நல்ல வசதியான இடம், இதை விட்டால் உன்னால் உன் மகள்களை திருமணம் செய்யவே முடியாது என்பது போல் பேசினார். ஆனால் சாரதா, இப்போது என் மகள் வாழ்க்கையை இப்படி அமைக்க எனக்கு விருப்பம் இல்லை என்பது போல் பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author