Mahanadhi Today Episode | 12.04.2023 | Vijaytv
mahanadhi. 12.04.2023
மகாநதி தொடரில் இன்று, கங்கா தன் உயிரை விட நினைத்தார். ஆனால் அதற்குள் குமரன் வந்து அவர் கையை பிடித்து அழைத்து வந்து மணவறையில் அமர வைத்தார். பின் மாலை மாற்றி தாலியும் கட்டினார். இதை பார்க்க கூட பசுபதிக்கு பிடிக்கவில்லை. தன்னை மீறி இந்த திருமணம் நடந்து விட்டது என்று நினைத்து முறைத்தார். ஆனாலும் காவேரி அவரை முடிந்த வரை கிண்டல் செய்து கொண்டே இருந்தார். பின் கங்கா மற்றும் குமரன் இருவரும் சாந்தி வீட்டுக்கு கிளம்பினார்கள். அங்கு சென்றதும் சாந்தி கொந்தளித்தார். இனி நீ எனக்கு மகனே இல்லை என்று கூறினார். சாபம் விட்டார். இனி என் வீட்டுக்குள் வரவே கூடாது என்று கூறினார். மேலும் தலையில் தண்ணீர் ஊற்றி தலை முளுகிவிட்டேன் என்று கூறினார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் குமரன் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….