Mahanadhi Today Episode | 13.04.2023 | Vijaytv

mahanadhi. 13.04.2023

mahanadhi. 13.04.2023

மகாநதி தொடரில் இன்று, கங்கா மற்றும் குமரன் திருமணம் முடிந்தது. பின் சாந்தி அவர்களை அவரது வீட்டில் நுழைய விடவில்லை. அதனால் மீண்டும் சாரதா வீட்டுக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். அங்கு சென்றதில் இருந்து அவர்களுக்கு பால் பழம் கொடுப்ப்பது போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தது. வீட்டில் அனைவருமே மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் இந்த நாளில் தன்னோடு தன் அப்பா இல்லை என்பதை காவேரி நிவின் இடம் அழுது அவரது மனம் திறந்து பேசினார். அவர் மட்டும் இருந்து இருந்தால் இந்த திருமணம் கொடைக்கானலே திரும்பி பார்க்கும் அளவுக்கு செய்து இருப்பர் என்று கூறினார். நிவின் அவரை சமாதானம் செய்தார். பின் மறைமுகமாக அவரது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் காவேரி புரிந்தும் புரியாதது போல் இருந்தார். பின் கங்கா குமரன் இருவருக்கும் முதல் இரவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாட்டி ஆரம்பித்தார். சாரதா இவளோ அவசரமாக அந்த ஏற்பாடுகள் வேண்டுமா என்று யோசித்தார். ஆனால் நடக்க வேண்டியதை நடக்க அவிட வேண்டும் என்று வற்புறுத்தினார் பாட்டி . அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author