ராகினிக்கு ஆப்பு! Mahanadhi today episode 13th June 2024 Review
Mahanadhi Kaveri Shocked PC Hotstar.jpg
மகாநதி சீரியலில் இன்று காவேரியின் குடும்பம் ராகினியின் வருகையை பற்றி கவலையாக புலம்பி கொண்டிருக்கின்றனர். கங்காவும் குமரனும் ஆறுதல் கூறினாலும் சாரதா சமாதானம் ஆகவில்லை யமுனா தான் செய்த தவறை எண்ணி வருந்தி கொண்டிருக்கிறார் அப்பொழுது அங்கு வந்த காவேரி விஜய் அஜயை அறைந்ததை பற்றி கூறுகிறார். ராகினியையும் அறைந்திருக்க வேண்டியதுதானே என காவேரியிடம் கங்கா கேட்கிறார். பின்னர் அனைவரையும் காவேரி சமாதானப்படுத்த, யமுனாவின் முகம் வாடியே இருப்பதை கவனிக்கிறார். காவேரியை கங்கா தனியாக அழைத்துச் சென்று யமுனா நிவினிடம் பேசுவதைப் பற்றியும் அதனால்தான் கவலையாக இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் கூறுகிறார். அப்பொழுது அங்கு வந்த யமுனா சூழ்நிலையை சரி செய்ய பார்க்கிறார்.
பிறகு தையல் கடைக்கு கங்கா செல்கிறார் அங்கு குமரனும் கங்கா கங்காவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது காவேரி முதல் முதலில் கடை திறப்பு விழாவிற்கு கொண்டு வந்த பரிசை எடுத்து தரச் சொல்லி கங்கா கேட்கிறார். அவர் தூக்கிப்போட்ட அந்த பரிசை குமரன் தான் பாதுகாத்து வைத்திருந்தார். அவரதை எடுத்துக் கொடுக்க, அதில் இருக்கும் அகல் விளக்கை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார் கங்கா.
பின்னர் அஜய்யிடம் மிகவும் கோபப்படுகிறார் ராகினி. விஜய்யை திருப்பி அடித்திருக்க வேண்டும் என அவர் கூற, அப்பொழுது அங்கு வந்த காவேரி கிண்டல் செய்கிறார். பேச்சு வாக்குவாதமாக மாறுகிறது. அப்பொழுது ராகினி காவேரியை அடிக்க கை ஓங்க நர்மதா அவர் மீது கல்வீசி அறிகிறார். கடுப்பான ராகினியை சமாதானப்படுத்தாமல் அஜய் நர்மதாவை பாப்பா என்று அழைத்ததால் கோபமாக சென்று விடுகிறார். ராகினி நர்மதாவிடம் வன்முறை கூடாது என அறிவுறுத்துகிறார் காவேரி.