மகாநதி சீரியலில் இன்று காவேரி மகிழ்ச்சியாக விஜயுடன் காரில் அலுவலகத்திற்கு பயணம் செய்கிறார். ராகினியையும் அஜயையும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என விஜய் கூறியதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் காவேரி. பேச்சோடு பேச்சாக நாம் இருவரும் ஜாடிக்கேத்த மூடி சரியான ஜோடி என காவேரி கூற விஜய் ஒரு நொடி சலனப்படுகிறார். பின்னர் காவேரி அஜய் ராகினி விஷயத்தில் தான் இதை கூறியதாக சமாளிக்கிறார்.
அப்பொழுது யமுனா ரோட்டில் சோகமாக செல்வதை பார்த்த காவேரி விஜய் இடம் பொய்காரணங்கள் கூறி காரிலிருந்து இறங்கி விடுகிறார். யமுனாவை பின்தொடர்ந்து சென்று பார்த்தால் அவர் நிவினிடம் தன்னிடம் பேச சொல்லி கெஞ்சிக் கொண்டிருப்பதை பார்க்கிறார். நிவினோ எக்காரணத்தைக் கொண்டும் பேச முடியாது என கூறிவிடுகிறார். பின்னர் யமுனாவிடம் காவேரி கோபப்பட்டு வீட்டிற்குள் அழைத்து சென்று என்ன நடக்கிறது இங்கே என வினவுகுகிறார். இதை ராகினி ஒட்டு கேட்க முயற்சிக்கிறார் ஆனால் அவருக்கு எதுவும் கேட்கவில்லை. யமுனா காவேரிக்கு அதிர்ச்சி தரும் விதமாக தான் நிவினை காதலிப்பதாக கூறுகிறார். பின்னர் நிவினும் என்னை விரும்புகிறார். அதனால் தான் அவர் என் மேல் பாசமாக எல்லா உதவிகளும் செய்கிறார் என சொல்கிறார். காவேரி முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் தன் மனதை சரி செய்து விட்டு, யமுனாவிற்கு அறிவுரைகள் கூறி அனுப்புகிறார்.