Mahanadhi today episode – 21st May 2024 Review | Vijay Television
Mahanadhi Kaveri Vijay Romance PC Hotstar.jpg
மகாநதி சீரியலில் இன்று நிவின் யமுனாவிடம் ராகினி மற்றும் அஜயின் திருமண ஏற்பாடுகளைப் பற்றி கூறி அதை குமரனிடம் கூற சொல்கிறார். விஜயின் தாத்தாவிடம் இந்த விஷயத்தை கூறி திருமணத்தை நிறுத்துமாறு கூறுகிறார். யமுனா சரி சரி என தலையாட்டி விட்டு ஆனால் தன்னுடைய சுயநலத்திற்காக அதை யாரிடமும் கூறவில்லை.
இதற்கிடையில் கொடைக்கானலில் காவேரி விஜய்க்கு இன்னொரு பெரிய அறையை தூங்கச் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் அந்த அறையில் தான் தன்னுடைய அப்பா இறந்ததாக கூற விஜய் பயப்படுகிறார். காண்ட்ராக்ட் பற்றி தெரிந்து காவேரியின் அப்பா பேயாக வந்து பழி வாங்குவார் எனக்கு கூறுகிறார். காவேரி அப்படியெல்லாம் நடக்காது எனக் கூறுகிறார். பின்னர் விஜய் பயப்பட காவேரியும் அதே அறையில் உறங்குகிறார். விஜய் காவேரியிடம் கதை சொல்ல சொல்லிக் கேட்க அவர் பேய் கதை சொல்ல ஆரம்பிக்க உங்கள் அப்பா கதையும் வேண்டாம் பேய் கதையும் வேண்டாம் என விஜய் கூறிவிடுகிறார். காவேரி விஜயை பேய் போல பயமுறுத்த இருவருக்கும் இடையில் ஒரு ரசிக்கும்படியான காட்சி நடக்கிறது.
இதற்கிடையில் பசுபதி மணக்கோலத்தில் ராகினியை பார்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்வதை குறித்து வருத்தம் அடைகிறார். அஜயும் அன்பும் திருமணத்திற்கு கிளம்புகிறார்கள். ஜெயந்தி திருமணத்திற்கு செல்லவில்லை. நிவின் இவர்கள் திருமணத்திற்கு போவதை பார்த்து யமுனாவிடம் மீண்டும் தாத்தாவிடமும் குமரன் இடமும் கூறி ஆயிற்றா என கேட்கிறார். யமுனா கூறி ஆகிவிட்டது இங்கு பெரிய சண்டை என பொய் கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.