Mahanadhi today episode 29th May 2024 Review| Vijay Television
Mahanadhi Kaveri Ganga reunion PC Hotstar.jpg
மகாநதி சீரியலில் இன்று கங்கா தான் செய்த தவறை எண்ணி மீண்டும் மீண்டும் வருந்துகிறார். தன்னை மன்னித்துவிடுமாறு அவர் காவேரியிடம் கேட்க காவேரி எனக்காக நீ செய்ய வேண்டியதெல்லாம் மாமாவிடம் சண்டை போடாமல் இருப்பதே எனக் கூறுகிறார். இந்த நிலையிலும் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் தங்கை எண்ணி கங்கா உருகுகிறார். பின்னர் கங்கா தான்தான் சமைப்பேன் எனக் கூறி விட குமரனும் விஜய்யும் சேர்ந்து தேவையான பொருட்கள் வாங்க செல்கிறார்கள். காவேரி கங்காவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். காவேரி காய்கறி நறுக்கி தருகிறார்.
பின்னர் குமரன் யமுனாவை வீடியோ காலில் அழைத்து ஒரு அதிசயத்தை காட்டப் போவதாக கூறுகிறார். பின்னர் அங்கு விஜய் இருப்பதையும் காட்டுகிறார். கங்காவும் காவேரியும் வருகிறார்கள். குடும்பத்தில் அனைவரும் கங்கா காவேரியிடம் பேசியதையும் பின்னர் இப்பொழுது மனம் மாறியதையும் பற்றி அறிந்து கொள்கிறார்கள். கங்கா சாரதாவிடமும் மன்னிப்பு கேட்கிறார். சாரதா தனது மகள்கள் ஒன்று சேர்ந்தது எண்ணி கண்கலங்குகிறார். அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.