மகாநதி சீரியலில் இன்று காவிரியிடம் விஜய் அவரது அக்காவிடம் மீண்டும் பேசியதை பற்றி கேட்கிறார். சண்டை சரியானதால் அவருக்கு மகிழ்ச்சியா எனவும் வினவுகிறார். முதலில் இதை பெரிய விஷயம் இல்லை என காவேரி கூறினாலும் பின்னர் தான் குமரனுக்காக தான் இந்த தியாகத்தை செய்தேன் எனவும் கூறுகிறார். கங்கா மிகவும் நல்லவள் ஆனாலும் குமரனை மனமில்லாமல் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். இப்பொழுது ஆனால் அவர்களுக்குள் ஒரு புரிதல் வந்துவிட்டது என மகிழ்ச்சியடைகிறார். மகிழ்ச்சியாக இருக்கும் காவிரியை பார்த்து விஜய்யும் மகிழ்ச்சியாகிறார்.
காலையில் விரைவில் எழுந்த குமரன் விஜயின் காரை துடைக்கிறார். அதற்கு விஜயும் காவிரியும் அதிர்ச்சி ஆகிறார்கள். கங்கா அதற்கு எரிச்சலாகிறார். பின்னர் கங்காவும் காவேரியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விஜய்க்கு தனது மனதின் உணர்ச்சிகளை உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாது என காவேரி கூறுகிறார். பின்னர் காவேரியும் விஜய்யும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது குமரனின் தாய் சாந்தி வருகிறார். அவரது வீட்டிற்கு கங்கா வராததை குத்தி காட்டுகிறார். விஜய்யை சாப்பிடவும் அழைக்கிறார். அனைவரும் சேர்ந்து மன்னவனூர் செல்ல இருப்பதாக கூறுகிறார்கள்.