மகாநதி சீரியலில் இன்று இரண்டு ஜோடிகளும் இரு சக்கர வாகனத்தில் மன்னவனூர் நோக்கி கிளம்புகிறார்கள். போகும் வழியில் குமரன் பாதையை தவறாக கூறி விடுகிறார் கங்கா அவரை கடிந்து கொள்கிறார். ஒரு வழியாக சரியான இடத்திற்கு சென்று அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இயற்கை அழகை ரசிக்கிறார்கள்.
பின்னர் வீடு திரும்பிய பின் சாந்தி அனைவரும் மிக தாமதமாக வந்ததை பற்றி கடுப்படிக்கிறார். கங்கா திட்டு வாங்குவதில் இருந்து காவேரி ஏதோ சற்று காப்பாற்றுகிறார் பின்னர் அனைவரும் உணவருந்த ஒன்றாக அமரும் பொழுது குமரன் தான் கங்காவுக்கு கொடுத்த வாக்குப்படி இனி விஜயை விட ஸ்டைலாக நடந்து கொள்வேன் என சாப்பிட முள் கரண்டியை கேட்கிறார். அதற்கு சாந்தி எரிச்சல் ஆகி அதை பிடுங்கி வைத்து விடுகிறார்.
பின்னர் சாந்தி சென்றுவிட விஜய் காவேரியிடம் இன்று இரவு குடிக்க அனுமதி உண்டா என கேட்கிறார். என்ன புதிதாக அனுமதி எல்லாம் எனக்காக இல்லை உன் அக்காவும் மாமாவும் இருக்கிறார்களே எனக் கூறுகிறார். குமரன் மாமாவும் எப்பொழுதாவது குடிப்பார் எனக்கூறி இருவரும் சேர்ந்து கச்சேரியை வைத்துக் கொள்ளுங்கள் என சொல்கிறார் காவேரி. ஆனால் குடிக்க உட்கார்ந்த உடன் கங்கா குமரனை வருத்தத்தோடு பார்க்கிறார். அதை அனைவரும் பார்க்கிறார்கள்.