Mouna Ragam 2 Serial Today Episode | 02.12.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, மனோகர் தன் திட்டம் அனைத்தும் வீணாகி போனது என்று மிகவும் வருந்தினார். தருண் வருண் மனோகர் அனைவரும் பாடகர் யாரையாவது ஏற்பாடு செய்ய முயற்சித்தார்கள். ஆனால் அதற்கு யாரும் முன் வரவில்லை. சத்யா அந்த 12 மணி நேரம் தானே பாடுவதாக கூறினார். ஆனால் மனோகர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதெல்லாம் பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே பாட முடியும் இதனால் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறினார். ஆனால் சத்யா தான் கண்டிப்பாக இந்த போட்டியில் கலந்துகொள்வேன் என்று தீர்மானமாக கூறினார். தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஷீலா கேவலம் 5 லட்சம் பணத்துக்காக மருமகளை பாட வைக்கிறார் என்று பேர் வந்துவிடும் என்று கூறினார். மனோகர் பணத்திற்கு தான் படுகிராய் என்றால் அவள் எந்த அளவிற்கு மன வருத்தத்தில் இருந்தால் இப்படி ஒரு முடிவு செய்து இருப்பாள் என்று வருந்தினார். இது அனைத்துக்கும் வருண் பேசிய வார்த்தைகள் காரணம் என கூறுகிறார்.அடுத்து என்ன நடந்தது. காணொளியை பார்க்க….

About Author