Mouna Ragam 2 Today Episode | 01.02.2022 | Vijaytv
Mouna Ragam 2.01.02.2022
மௌன ராகம் தொடரில் இன்று, மனோகர் இந்த திருமணத்திற்கு சம்மதிதத்தை கேட்டு அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் அதில் ஒரு நிபந்தனையும் உண்டு என்று ஷீலா கூறினார். சத்யாவை சொல்லும்படி கூறினார். கார்த்திக் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள கூடாது என்று மனோகர் கூறியதை சத்யா தயக்கமாக கூறினார். அதை கேட்டதும் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். காதம்பரி அதற்கு நான் சம்மதிக்கவே மாட்டேன் என்று கூறினார். கார்த்திக் இல்லாமல் எப்படி இத திருமணத்தை நடத்த முடியும்? எனக்கு அதில் விருப்பம் இல்லை, நடக்கவும் விட மாட்டேன் என்று கூறினார். ஆனால் ருக்மணி இதை விட்டால் வேறு வழி இல்லை, எப்படியாவது ஸ்ருதி திருமணம் நடக்க வேண்டும், அதற்கு இதான் ஒரே வழி என்றார். கார்த்திக் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். பின் அவரே தான் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள மாட்டேன், எனக்கு என் மகளின் சந்தோசம் தான் முக்கியம் என்று கூறினார். இதை கேட்ட காதம்பரி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஸ்ருதி தனக்கும் தருணுக்கும் திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று கூறினார். அதற்காக யாரும் வரவில்லை என்றாலும் பரவா இல்லை என்றார். அம்மா அப்பா யார் இல்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை, எனக்கு என் திருமணம் முடிய வேண்டும் என்று கூறினார். கார்த்திக் இடம் உங்களால் என் திருமணம் நின்று விட வேண்டாம் என்று கூறினார். இந்த திருமணம் நடக்கவில்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று மிரட்டினார். அதற்கு கார்த்திக் என்ன பதில் கூறினார்? காதம்பரி ஒத்துக்கொண்டாரா? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..