Mouna Ragam 2 Today Episode | 01.02.2023 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் மற்றும் கஸ்தூரி இருவரும் காலையில் நடை பயணம் சென்று வீட்டுக்கு திரும்பினார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டும் அன்பும் அக்கறையும் பார்த்து தருண் வியந்தார். பின் ஷாலினி இதை பற்றி தருண் இடம் பேசினார். அப்போது தருண் தன் அம்மா அப்பா இருவரும் இப்படி இருப்பதை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். பின் ஷாலினி உங்களுக்கும் ஸ்ருதிக்கும் நடுவில் எதும் பிரச்சனையா என்று கேட்டார். அதை கேட்டதும் தருண், தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை. தனக்கு வாழ்க்கையில் இனி சந்தோசமே இல்லை என்று வருந்தினார். ஆனால் ஷாலினி, அதெல்லாம் போக போக உங்கள் வாழ்க்கை உங்களுக்கு பிடித்ததாக மாறும் என்று நம்பிக்கை கூறினார். காதம்பரி பாட்டு கத்துக்கொள்வேன் என்று கத்தி கத்தி அந்த ஆசிரியரையே ஒட வைத்தார். ஆனால் ருக்மணி அவரையும் மிரட்டி மீண்டும் பயிற்சி கொடுக்க வைத்தார். அந்த அனேர்ம வருண் மற்றும் சக்தி இருவரும் கார்த்திக் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சொர்ணம் இந்த வீட்டில் காதம்பரி பாட்டு பாடுகிறேன் என்று அனைவரையும் கொடுமை செய்கிறார் என்று கேலி செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…