Mouna Ragam 2 Today Episode | 01.03.2022 | Vijaytv

Mouna Ragam 2.01.03.2022

Mouna Ragam 2.01.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு மீண்டும் சந்தேகம் அதிகரித்தது. ஷீலாவிடம் தாண்டிக்குடியில் சத்யா அம்மா என்று ஒருவரை ஃபோட்டோ எடுத்ததை எடுத்து ஷீலாவிடம் காமிதார் ஸ்ருதி. இவரை தெரியுமா என்று கேட்டார். அதற்கு ஷீலாவும் தெரியுமே என்று கூறினார். உடனே இவர் தான் சத்யா அம்மாவா என்று கேட்டார் ஸ்ருதி. ஆனால் ஷீலா, இவரை எனக்கு தெரியும் ஆனால், இது சத்யா அம்மா இல்லையன்று கூறினார்.இதனால் அதிர்ச்சி அடைந்தார் ஸ்ருதி. பின் ஷீலா தூங்க சென்றுவிட்டார். அடுத்த நாள் காலையில் ஸ்ருதிக்கு பூவெல்லாம் காட்டி வைத்துவிட்டார் சத்யா. அந்த நேரம் ஸ்ருதி உன் அம்மா ஸ்கூல் திறப்பு விழாவுக்கு வராதது வருத்தம் இல்லையா என்று கேட்டார். சத்யாவும் அது வருத்தம் தன என்றார். உன் அம்மாவை நேரில் பார்க்க முடியவில்லை அதனால் போட்டோவில் காட்டுமாறு கூறினார். உடனே சத்யா பதட்டம் அடைந்தார். உன் மொபைலில் இருக்கும் போட்டோவை காமி என்றார். பின் அவரே பார்க்க துடங்கினார். இதனால் பதட்டத்தில் தன் ஃபோனை புடிங்கி தனக்கு வேலை இருப்பதாக கூறி சென்றார் சத்யா. இதில் எதோ மர்மம் இருப்பது போல் உணர்ந்தார் ஸ்ருதி. அதனால் மீண்டும் ஷீலாவிடம் சத்யா அம்மா புகை படம் எதாவது இருக்குமா என்று விசாரித்தார். அவரும் சத்யாவின் பிறந்தநாள் ஆல்பம் ஒன்றில் இருக்கும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author