Mouna Ragam 2 Today Episode | 01.04.2022 | Vijaytv
Mouna Ragam 2. 01.04.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு சக்தி தான் சத்யா என்ற விஷயம் தெரிந்ததால் மல்லிகா பதட்டமாக இருந்தார். இனி சத்யாவை என்ன செய்வர் என்று பயந்தார். இனி சத்யா வாழ்க்கை தன்னை போல் ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கையாக மாறிவிடும் என்று பதறினார். சுகுமார் அவரை சமாதானம் செய்து வீட்டுக்குள் அழைத்து சென்றார். பின் தருண் மல்லிகாவின் உடல் நலம் பற்றி விசாரித்தார். பின் மல்லிகா தருண் கல்யாணத்திற்கு வர முடியாததால் ஒரு மோதிரம் பரிசாக கொடுத்தார். அதை பார்த்த ஸ்ருதி எனக்கு எந்த பரிசும் இல்லையா என்று கேட்டார். உடனே சத்யாவுக்கு வாங்கி வந்த சேலையை ஸ்ருதிக்கு கொடுத்தார். வருண் சத்யா வீட்டு ஆட்களை ஊர் சுற்றி பார்க்க திட்டம் போட்டார். அடுத்த நாள் எங்கெல்லாம் செல்கிறோம் என்று கூறினார். ஆனால் மல்லிகா ஸ்ருதி என்ன செய்வார் இனி என்ற யோசனையில் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…