Mouna Ragam 2 Today Episode | 01.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 01.06.2022

Mouna Ragam 2. 01.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் கோவமாக வீட்டை விட்டு கிளம்பியதில் இருந்து காதம்பரி அவருக்கு அழைத்துகொண்டு இருந்தார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் கோவத்தில் அவர் பெயரை கெடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். உடனே அடுத்த நாள் பத்திரிக்கையில் இருந்து ஆட்களை வர வைத்து பேசினார். கார்த்திக் பற்றி தவறாக பேசி வீடியோ எடுக்க வைத்தார் காதம்பரி. கார்த்திக் தன்னையும் தன் மகளையும் இத்தனை வருடங்களாக ஏமாற்றி இன்னொரு குடும்பத்தோடு இருப்பதாக கூறினார். 22 வருஷமாக தன்னை ஏமாற்றியே வாழ்க்கையை ஓட்டி உள்ளதாக கூறினார். மேற்கொண்டு தனக்கு நியாயம், நீதி வேண்டும் என்று கூறினார். கார்த்திக் கிருஷ்ணாவின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அட்டுமே பேசினார். அதே நேரம் ஸ்ருதி மனோகர் வீட்டில் அனைவரிடமும் தானும் அம்மாவும் தான் சித்திரவதை அனுபவத்ததாக கதை கட்டி பேசினார். அதையும் தருண் நம்பி ஏமாந்து ஸ்ருதிக்கு ஆறுதல் கூறினார். வருண் பழனி வீட்டில் இரவு சாப்பாடு சாப்பிடும் நேரத்தில் சக்தி சிறு வயது புகை படத்தை வைத்து பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author