Mouna Ragam 2 Today Episode | 01.09.2022 | Vijaytv
Mouna Ragam 2. 01.09.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் கோர்ட் வாசலில் காதம்பாரி, ருக்மணி மற்றும் விஸ்வநாதனை பார்த்து கோவத்தில் கொந்தளித்தார். தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக நான் தண்டனை கொடுப்பேன் என்று கூறினார். ஆனால் விஸ்வநாதன் இனி அதற்கு உன்னிடமே நேரம் இருக்காது. எப்போது மல்லிகா மற்றும் சக்திக்கு என்ன நடக்கும் என்ற பதட்டத்தில் தான் இருப்பாய் என்று கூறினார். இதனால் மேலும் கோவத்தில் கத்தினார் வருண். ஆனால் அவர்கள் அவர்களது வேலையை பார்க்க கிளம்பினார்கள். சக்தி தான் வருனுக்கு சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டில் ஸ்ருதி தன் அம்மா மற்றும் பாட்டி நிரபராதி என்று மனோகர் இடம் பெருமையாக கூறினார். ஆனால் அதற்குள் வருண் அங்கு வந்து விஸ்வநாதன் தான் பணம் கொடுத்து இப்படி செய்து இருக்கிறார் என்றார். மேலும் இனியும் சக்தி மற்றும் மல்லிகவை விட போவதாக இல்லை என்று என்னிடம் சவால் விடுகிறார் என்று கத்தினார். மனோகர் ஒன்றும் புரியாமல் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…