Mouna Ragam 2 Today Episode | 01.11.2022 | Vijaytv
Mouna Ragam 2. 01.11.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி இத்தனை மாதங்கள் கழித்து அவர் மனதில் வருண் மேல் அவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தினார். வருணுக்காக ஒரு சாக்லேட் மற்றும் அவரது காதலை வெளிப்படுத்த ஒரு காதல் அட்டையை கொடுத்தார். அதை பார்த்த வருண் மிகவும் சந்தோஷப்பட்டர். மேலும் அதில் இருப்பதை சக்தியே அவரது வாயால் படித்து காட்ட வேண்டும் என்று கூறினார். அப்படியே சக்தியும் செய்தார். முதல் முறையாக சக்தி அவர் வாயல் வருணை காதலிப்பதாக கூறினார். அடுத்த நாள் காலையில் எழுந்ததும் கார்த்திக் மற்றும் அவரது அம்மா இருவரும் பேசிக்கொண்டார்கள். மல்லிகாவும் கார்த்திக்கும் சேர்ந்து பாடுவதை பார்க்க ஆர்வமாக இருப்பதாக கூறினார் அவரது அம்மா. அந்த நேரம் மல்லிகாவை தேடி சொர்ணம் வந்தார். மல்லிகா இந்த வீட்டில் உள்ள வேலையெல்லாம் இழுத்து போட்டு செய்வார் என்றும் இங்குதான் இருப்பாள் என்று மல்லிகாவை தேடினார். ஆனால் வீட்டில் இங்கு தேடியும் மல்லிகாவை காணவில்லை. முதலில் சாதாரணமாக இருந்தாலும் பின் அவர் வெகு நேரம் வராததால் பதட்டம் அடைந்தார்கள். சக்தியை பார்க்க போய் இருப்பாரோ என்று நினைத்து சக்தியை கேட்டார்கள். ஆனால் சக்தியையும் அவர் பார்க்க வரவில்லை என்று தெரிந்ததும் வீட்டில் அனைவரும் குழப்பத்தில் இருந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.