Mouna Ragam 2 Today Episode | 02.02.2022 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, தருண் திருமண வேலைகள் ஆரம்பம் ஆனது.வருண் தானே எல்லா வேலைகளையும் ஏற்பாடு செய்துவிட்டேன் என்றார். தருண் இடம் இந்த கல்யாணத்தில் உனக்கு விருப்பம் தானே? ஷ்ருதியை உனக்கு புடிக்கும் தானே? உனக்கு பிடித்த வாழ்க்கை தானே? என்று வருண் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையை சொல்ல முடியாமல் தவித்தார் தருண். தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் உணமையை சொன்னால் சத்யா வருண் வாழ்கையில் பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்து , தனக்கு பரிபூரண சம்மதம் என்று கூறினார். இதனால் கல்யாண ஏற்பாடுகளும் உடனே நடந்தது. கார்த்திக் தன்னால் தன் மகளின் திருமணத்தை பார்க்க முடியவில்லையே என்று வருத்தத்தில் இருந்தார். காதம்பரி கார்த்திக் இல்லாத இந்த கல்யாணம் நடக்க வேண்டுமா என்று யோசித்தார். ஆனால் ஸ்ருதி யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் தனக்கு இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…