Mouna Ragam 2 Today Episode | 02.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 02.12.2022

Mouna Ragam 2. 02.12.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் மற்றும் தருண் விஜயதசமி விழாவுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து இருந்தார்கள். வருண் சக்தி இருவரும் பாட்டு பள்ளிக்கு கிளம்பினார்கள். அப்போது கூட ஸ்ருதியை யாருமே அங்கு அழைக்கவில்லை. இதனால் எரிச்சலில் இருந்தார் ஸ்ருதி. ஆனால் சக்தி அவரை விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கும் எரிச்சலாக பேசினார். பின் பாட்டுப்பள்ளிக்கு அனைவரும் போய் சுற்றி பார்த்தார்கள். சொர்ணம் அந்த பள்ளியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சக்திக்கு கிடைக்க வேண்டிய பரிசு அவளுக்கே வந்ததை நினைத்து கார்த்திக், மல்லிகா, சொர்ணம் என்று அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். அதே நேரம் ஸ்ருதி இவர்கள் சந்தோசத்தில் இருப்பதை பார்த்து மேலும் கோவத்தில் கொந்தளித்தார். உடனே விஸ்வநாதனுக்கு அழைத்து அவர் கோவத்தை தெரிவித்தார். அவரும் கண்டிப்பாக சந்தோசத்தில் முடியாது என்று கூறினார். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்துவிட்டேன் என்று கூறினார். சக்தி மற்றும் வருண் இருவரும் சேர்ந்து பேசி சிரித்து சந்தோசமக இருக்கும் நேரம் ஒரு பெண் அங்கு ஒரு நெருப்பை பற்ற வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author