மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா பாடிய பாடல் அருமையாக உள்ளது என்று கூறி அவருக்கே அந்த உயரிய விருதை கொடுத்தார்கள். அதை வாங்கிய சத்யாவை இரண்டு வார்த்தை பேசுமாறு கூறினார்கள். சத்யா தனக்கு இதற்கு முன்னாள் சின்ன சின்ன பரிசுகள் விருதுகள் மட்டுமே வாங்கியதாகவும். இந்த விருது மிக பெரிய விருது எனவும் கூறினார். இதற்கு முழுக்க முழுக்க எனதu கணவர் வருண் மட்டுமே காரணம் என்று கூறினார். தனக்கு இந்த போட்டியில் விருது கிடைக்க வேண்டும் என்று எண்ணி இவர் எனக்கே தெரியாமல் எனது பாட்டை இங்கு அனுப்பி உள்ளார். அதனால் தான் தனக்கு இவளோ பெரிய விருது கிடைக்க காரணம் என்று கூறி வருணை மெடைக்கும் அழைத்தார். இதை பார்த்து மனோகர் மற்றும் தருண் சந்தோசத்தில் பூறித்தார்கள். இங்கு நடப்பதை மல்லிகா தொலைகாட்சியில் பார்த்தார். கார்த்திக் அவரது கைபேசியில் பார்த்தார். அனைவருக்கும் பெருமை தாங்கவில்லை. ஷீலாவுக்கு மட்டும் அங்கு இருக்கவே எரிச்சலாக இருந்தது. சுருதி இந்த விருது வாங்கியதை பார்த்து மீண்டும் கோபம்கொண்டார். மீண்டும் கார்த்திக்கிடம் வந்து ஆவேசமாக பேசினார். தனக்கும் தருணுக்கும் உடனே திருமணம் நடக்க வேண்டும் என்று கூறினார். உடனே மனொஹரிடம் பேசும்படி கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…