Mouna Ragam 2 Today Episode | 03.01.2023 | Vijaytv
Mouna Ragam 2. 03.01.2023
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் அவரது அம்மாவை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். தன் அம்மாவை காப்பாற்ற முடியவில்லை என்று குற்ற உணர்ச்சி போனது. மேலும் நெருப்பை பார்த்து அவர் அளருவாரோ என்று அனைவரும் பயந்த நிலையில் அதையும் அவர் மறந்து விட்டார். இனி நெருப்பை பார்த்து எந்த பயமும் இல்லை வருனுக்கு. மனோகர் பல முறை சக்திக்கு நன்றி கூறினார். இந்த 15 வருடத்தில் நான் செய்யாத காரியம் இல்லை, நான் போகாத கோவில் இல்லை, நான் பார்க்காத டாக்டர் இல்லை, ஆனால் யராலையும் செய்ய முடியாத காரியத்தை நீ தனி ஆளாக செய்து முடித்து விட்டாய் என்று கூறினார். சக்தி முன் மண்டி இட்டு அழுது நன்றி கூறினார். பின் அனைவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். வருண் தருண் இடம் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்துகொண்டார். சக்தி பாட்டுப்பள்ளியில் விஸ்வநாதன் தீ வைத்தது, அதனால் வருண் நிலை மோசமானது. பின் சக்தியை நெருங்க விடாமல் செய்தது, பின் தன் அம்மா உயிரோடு இருப்பது என்று அவருக்கு நடந்தவை தெரிய வந்தது. அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து என்ன செய்வ்தேன புரியாமல் நின்றார் வருண். மனோகர், தன் மகன் பிரச்சனையும் பொருட்படுத்தாமல் சக்தி திருமணம் செய்து, அவனை குணப்படுத்தி, இந்த குடும்பத்தை நல்ல வழியில் வழி நடத்துவதற்காக மீண்டும் நன்றி கூறினார் சக்திக்கு. மேலும் கார்த்திக் மல்லிகா இருவருக்கும் இப்படி ஒரு மகளை பெற்றதற்கு அவர்களுக்கும் நன்றி கூறினார். பின் வருண் சக்தி இடம் வந்து அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து காதலை வெளிப்படுத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….