Mouna Ragam 2 Today Episode | 04.01.2023 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி தன் அப்பா விஸ்வநாதன் மீது கோவத்தில் இருந்தார். அவரை பார்த்து கத்தி தீர்த்தார். இது வரை என்ன செய்தீர்கள், என் வாழ்க்கையை சரி செய்தீர்களா? கார்த்திக் மல்லிகாவை பிரித்து என்னை வாழ வைத்தீர்களா? சக்தியை கொலை செய்வேன் என்று சொல்லி அதையாவது செய்து முடித்தீங்களா? இல்லை வருண் கதையை தான் முடிச்சீங்களா? எதையுமே செய்யாமல் எப்படி இருக்கலாம் என்று கத்தினார். இருந்தும் தான் செய்வது காதம்பரி நல்லதுக்கு தான் என்று கூறினார். ஆனல் காதம்பரி எதையும் கேட்கும் நிலையில் இல்லை. வருண் சக்தியை பார்த்து தன் காதலை கொட்டினார். தனக்கு இத்தனை வருடம் இருந்த பிரச்சனையை, தனி ஆளாக உன் உயிரையும் பணையம் வைத்து என்னை குணப்படுத்தி இருக்கிறார் என்று பெருமையாக கூறினார். சக்தி தனக்காக வருண் என்னவெல்லாம் செய்து இருக்கிறார் என்று அவரும் கூறினார். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்து இருக்கும் காதலை வெளிப்படுத்தினார்கள். சக்தி நடந்ததுகொள்ளும் விதத்தை பார்த்து கஸ்தூரி குழப்பம் அடைந்தார். அதை மனோகர் இடம் கேட்கவும் செய்தார். ஆனல் மனோகர், சக்தி இந்த வீட்டுக்கு கிடைத்த வரம். அவள் இந்த வீட்டுக்காக செய்தது பல. வருண் விஷயத்திலும் அவள் தான் கவனமாக இருந்து குணப்படுத்தினார் என்று புகழ்ந்தார். பின் அடுத்த நாள் ஸ்ருதி மேலும் சக்தியை பற்றி தவறாக சொல்லி அவர் மனதை குழப்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…