Mouna Ragam 2 Today Episode | 04.05.2022 | Vijaytv
Mouna Ragam 2.04.05.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அனுவை பாட்டு பள்ளிக்கு அழைத்து வந்தார். அனு அவளது தோழியிடம் பேசிக்கொண்டு இருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அனுவை அந்த ரௌடி கும்பல் கடத்தியது. சத்யா பதறிப்போய் அங்கு அந்த காரை தொடர்ந்தார். ஆனால் அங்கு இருந்த யாரும் அதை செய்ய முடியவில்லை. ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவியது. வெளியே என்ன சத்தம் என்று தெரியாமல் ஸ்ருதி குழப்பமாக வந்தார். அங்கு செக்யூரிட்டி ஒரு குழந்தையை யாரோ கடத்திவிட்டார்கள் என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்தார். சத்யா உடனே விஷயத்தை போலீஸ்காரர் மற்றும் அவர் மனைவிக்கு அழைத்து கூறினார். அவர்களும் உடனே விரைந்து வந்தார்கள். ஸ்ருதி உடனே சத்யா தான் எதோ வேண்டும் என்றே செய்கிறாள் என்பது போல் பேசினார். பின் அந்த இடத்துக்கு உடனே போலீஸ் வந்து விசாரிக்க ஆரம்பித்தார்கள். இந்த பள்ளி நடத்துவர்கள் தான் இந்த பொறுப்பை எரிக்க வேண்டும் என்று கத்தினார். இதற்கிடையில் வருண் சத்யாவை பார்த்து மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு அழைத்து செல்ல அந்த குழந்தையின் வீட்டு வாசலில் நின்றார். பல மணி நேரம் அங்கேயே நின்று அவருக்காக காத்து இருந்தார். சத்யாவுக்காக பூ வாங்கி வைத்திருந்தார். திடீர் என்று எதோ ஒரு அழைப்பு வந்ததும் உடனே பதட்டமாக கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…