Mouna Ragam 2 Today Episode | 05.01.2022 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி கல்யாண விஷயமாக சென்ற கார்த்திக் அவமானத்துடன் வீடு திரும்பினார் கார்த்திக். அவருக்காக வீட்டில் சுருதி மற்றும் காதம்பரி இருவரும் காத்திருந்தார்கள். அவர் வந்ததும் சுருதி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். மனோகர் சம்மதம் சொல்லிவிட்டாரா? தருண் மனம் மாறிவிட்டாரா? அங்கு என்ன நடந்தது? என்ன பேசினீர்கள் என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் கார்த்திக் மௌனமாக இருந்தார். பின் மனோகர் சம்மதிக்கவில்லை என்று கூறினார். இதை கேட்டதும் சுருதி மிகவும் கோபம் கொண்டு கார்த்திக்கை திட்டிவிட்டு தன் அறைக்கு சென்றார். காதம்பரியும் அதையே செய்தார். உங்களால் சுருதிக்கு எந்த நல்ல விஷயமும் நடக்க போவது இல்லை என்று கத்தினார். கார்த்திக் நடந்ததை தன் அம்மாவிடம் கூறி வருத்தப்பட்டார். வருண் மனோகரிடன் மீண்டும் தருண் காதலிக்கும் விஷயத்தை சொல்லி மீண்டும் அவரை சங்கடபடுத்தினார். தருண் அதை பற்றி பேச விருப்பம் இல்லை என்று கூறினார். ஆனாலும் வருண் அதை விடவில்லை. மீண்டும் அந்த பெண்ணை பற்றி விசாரித்தார். நாங்களே பேசி திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக கூறினார். அதற்கு தருண் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…