Mouna Ragam 2 Today Episode | 05.05.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி அவர் அம்மா வீட்டுக்கு கோவத்தோடு வந்தார். வந்ததும் சத்யா இந்த வீட்டை விட்டு வெளியே போனதால் என் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தால், என்னை நிம்மதியாகவே இருக்க விடவில்லை என்று கத்தினார். காதம்பரி என்ன நடந்தது என்று புரியாமல் நின்றார். என்ன நடந்தது என்று விசாரித்தார். ஸ்ருதி நடந்ததை கூறினார். குழந்தையை யாரோ கடத்தியதற்கு நாடகம் போட்டு இந்த ஸ்கூலை என்னிடம் இருந்து பறிக்க பார்க்கிறாள் என்றார். ருக்மணி அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார். இந்த திட்டம் போட்டு குழந்தையை கடத்தியதே தான் தான் என்றார்.அதை கேட்டதும் காதம்பரி மற்றும் ஸ்ருதி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். எதற்காக இப்படி செய்தார் என்று கோவப்பட்டார்கள். ஆனால் ருக்மணி எந்த பிரச்சனையும் வராது, இதனால் சத்யா இருக்க இடம் இல்லாமல் ஊருக்கு போய் விடுவாள் இல்லை என்றால் ஜெயிலில் போடுவார்கள் என்று கூறினார். இதெல்லாம் சரி இல்லை என்று கூறினார் காதம்பரி. ஆனால் ருக்மணி அதை பற்றி கவலைப்படவில்லை. போலீஸ் ஸ்ருதி இடம் சிசிடிவி கேமராவில் வீடியோ பதிவு ஆகி இருக்கும். அதை தருமாறு கூறினார். ஆனால் ஸ்ருதி அதை உடனே இல்லாமல் செய்துவிட்டார். மேலும் அந்த கேமரா வேலை செய்யவில்லை என்று கூறினார். இதனால் அனு வீட்டில் அனைவரும் கோபம் கொண்டார்கள். உடனே ஸ்கூலுக்கு வந்து கேட்டார்கள். சத்யா அந்த கேமரா வீடியோவை உடனே தருமாறு கெஞ்சினார். ஆனால் ஸ்ருதி இல்லவே இல்லை என்று கூறினார். பின் அனைவர் பார்வையும் சத்யாவை கெட்டவளாக பார்க்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் இந்த ஸ்கூல் என் பேரில் இருப்பதால் உனக்கு பொறாமை அதனால்தான் இதில் இவளோ ஆர்வமாக இருக்கிறாய் என்று உசுப்பேற்றினாள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…