Mouna Ragam 2 Today Episode | 05.09.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி ஜெயிலில் இருந்து நேராக கார்த்திக் வீட்டுக்கு வந்தார். வந்ததும் மல்லிகாவை கழுத்தை பிடித்து நெரித்தார். ஆனால் கார்த்திக் முழுதாக மல்லிகா பக்கம் நின்றார். மேலும் இந்த வீட்டில் மல்லிகா என் மனைவியாக இங்கே தான் இருப்பார் என்று கூறினார். மேலும் காதம்பாரீ இனி இந்த வீட்டில் இருக்க அருகதை இல்லை. கொலையாளிகளுக்கு இங்கு இடம் இல்லை என்று கூறினார். பின் காதம்பரி கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் கார்த்திக். இதை பார்த்த விஸ்வநாதன் இதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று எச்சரித்தார். ஆனால் கார்த்திக் இந்த காரியத்தை நான் எப்போதோ செய்து இருக்க வேண்டும் என்று கூறி வெளியே அனுப்பினார். ஸ்ருதி தன் அம்மாவை வீட்டை விட்டு அனுப்பி விட்டு நீங்கள் மட்டும் சந்தோசமாக இருக்க முடியாது என்று அவர் பங்குக்கு பேசிச்சென்றார். ஆனால் மல்லிகா நடப்பது எதுவும் சரி இல்லை, உடனே தாண்டிக்குடி செல்வது தான் சரி என்றார். ஆனால் விஸ்வநாதன் வீட்டில் வைத்து காதம்பரிக்கு ஆறுதல் கூறினார். மேலும் இங்கு இருக்கும் யாரையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…