Mouna Ragam 2 Today Episode | 05.12.2022 | Vijaytv
Mouna Ragam 2. 05.12.2022
மெளன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி மற்றும் வருண் இருவரும் இந்த விஜயதசமி விழா சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். சக்தி சந்தோசமாக இருப்பதையே வருண் விரும்பினார். அந்த நிலையில் விஸ்வநாதன் செய்த திட்டப்படி அந்த இடத்தில் நெருப்பு பற்ற வைத்தார் ஒரு பெண். அதை முதலில் சக்தி தான் பார்த்தார். உடனே அதை அணைக்க முயற்சி செய்தார். வருண் பார்க்காமல் வைக்கவும் முயற்சி செய்தார். ஆனால் அதற்கு மாறாக வருண் நெருப்பு இருக்கும் பக்கம் திரும்பிவிட்டார். உடனே அவர் நெருப்பை பார்த்து அலற ஆரம்பித்தார். அதன் பின் வருனை சமாளிக்க முடியவில்லை. பின் தருண், மனோகர், கார்த்திக், மல்லிகா என்று அனைவரும் பதரிப்போனார்கள். என்ன முயற்சி செய்தாலும் அவரை சமாதானம் செய்ய முடியவில்லை. பின் மயங்கினார். அதற்குள் டாக்டர் வந்து அவரை பரிசோதித்தார். இத்தனை நாள் மாத்திரை சாப்பிட்டும் சரியாகாமல் இருப்பதை நினைத்து மனோகர் வருந்தினார். பின் மயக்கம் தெளிந்த வருண் மீண்டும் சக்தியை பார்த்து நெருப்பு நெருப்பு என்று கத்த ஆரம்பித்தார். சாதாரனமாக மயக்கம் தெளிந்ததும் சரி ஆகி விடுவான். ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லையே என்று பயந்தார்கள். இதை பார்த்து ஸ்ருதி, விஸ்வநாதன், ருக்மணி மற்றும் காதம்பரி அனைவரும் சேர்ந்து சிரித்து இனிப்பு எடுத்து கொண்டாடினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…