Mouna Ragam 2 Today Episode | 06.01.2022 | Vijaytv
Mouna Ragam 2.06.01.2022
மௌன ராகம் தொடரில் இன்று, தருண் கல்யாணத்தை பற்றி மீண்டும் மனோகர் பேசினார். மீண்டும் தருண் இடம் அவர் காதலிக்கும் பெண் யார் என்று விசாரித்தார். ஆனால் தருண் அதை பற்றி பேச வேண்டாம் என்று கூறி எழுந்து சென்றார். பின் வருண் விடாமல் அவரிடம் அந்த பெண்ணை பற்றி விசாரித்தார். யாராக இருந்தாலும் பரவாயில்லை அப்பாவும் நானும் உங்களை சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார். ஆனால் தருண் இதி பற்றி பேச வேண்டாம் அது முடிந்த விஷயம் என்று கூறினார். ஆனால் வருண் விடவில்லை. இதனால் தருண் எரிச்சல் அடைந்தார். அப்போது தான் அந்த பொண்ணுக்கு திருமணம் ஆன விஷயத்தை கூறினார் தருண். அதை கேட்டதும் வருண் அதிர்ச்சி அடைந்தார். பின் தருண் இடம் மன்னிப்பும் கேட்டார். சத்யா தருண் இடம் சுருதியை திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறினார். ஆனால் தருண் இனி சுருதி விஷயமாக என்னிடம் பேச வேண்டாம் என்று உறுதியாக கூறினார். சத்யா மல்லிகாவுக்கு அழைத்து பேசினார். அப்போது மல்லிகா மதுரைக்கு மருத்துவரை பார்க்க செல்வதாக கூறினார். சத்யா தன்னிடம் எதற்கு அதை சொல்லவில்லை என்று கோவம் கொண்டார்.அதற்கு மல்லிகா என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.