Mouna Ragam 2 Today Episode | 06.06.2022 | Vijaytv
Mouna Ragam 2. 06.06.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் மல்லிகாவுடன் சேர்ந்து இனி இருக்கலாம் என்று இந்த ஊருக்கு வந்தாலும் மல்லிகா கோவத்தில் அவரை வெளியே போக சொன்னதால், அவரும் கிளம்பினார். போகும் வழியில் ஒரு கோவிலில் இறங்கி மல்லிகவுக்கு நீயாவது துணையாக இரு என்று வேண்டினார். அந்த நேரம் அங்கு வருண் காரை விட்டு இறங்கினார். அவரோடு சேர்ந்து பழனி மற்றும் அவரது மனைவி இரங்குவதையும் பார்த்தார். அவர்களை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர்கள் மல்லிகாவை பார்க்கவே செல்வார்கள் என்று நினைத்துக் கொண்டார். மேலும் அவர்கள் கூட இருந்தால் மல்லிகா சக்தி இருவருக்கும் நலல்து என்று அவரும் ஊருக்கு கிளம்பினார். சற்று நேரத்தில் வருண் மல்லிகா வீட்டுக்கு பழனியை அழைத்து வந்து விட்டார். அவர்களும் மல்லிகாவின் பார்க்க ஆசையாக வந்தார்கள். மல்லிகாவை பார்த்ததும் கண் கலங்கி நின்றார். நான் இருக்கும் இடத்துக்கு வந்து இருக்கலாமே என்று கேட்டார். ஆனால் மல்லிகா இனியும் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று தான் வரவில்லை என்று கூறினார். மேலும் சக்தியை பார்த்து அழுதார். அப்போது வருண் தான் சத்யாவின் கணவர் என்று அவர்களுக்கு தெரியவந்தது. ஆனால் மல்லிகா வருண் மீது கோவமாக இருந்தார். கோவமாக பேசினார். சக்திக்கு விவாகரத்து அனுப்பி இருக்கிறார் என்று மல்லிகா கூறினார். இதை கேட்டதும் வருண் அதிர்ச்சி அடைந்தார். தான் அப்படி எதுவும் அனுப்பவில்லை என்று கூறினார். ஆனால் அதை யாரும் கேட்க வில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…