Mouna Ragam 2 Today Episode | 06.09.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா இந்த ஊரில் இனியும் இருக்க வேண்டாம். தனடிக்குடிக்கு தான் செல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் சித்தி அங்கு சென்றும் நாம் நிம்மதியாக இல்லை. இதே போல் தான் யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயந்து பயந்து வாழ்ந்தோம். இனியும் அப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம். இனியாவது நமக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கூறினார். மேலும் இங்கேயாவது நமக்கு சொந்தமாக இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஸ்கதி கூறினார். இதனால் மல்லிகா வாய் அடைத்து போனார். பின் வருண் மற்றும் சக்தி இருவரும் இரவு சாப்பாடுக்கு ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு அவர்கள் சேர்ந்து சந்தோசமாக பேசி சிரித்து சாப்பிட்டார்கள். ஆனால் அதை அங்கு நின்று விஸ்வநாதன் பார்த்து கோபம் கொண்டார். இன்னும் கொஞ்ச நாளில் உனது சிரிப்பு காணாமல் போய் விடும் என்று மனதில் நினைத்துக்கொண்டார். பின் வீட்டுக்கு வந்ததும் சாப்பிடும் இடத்தில் ஸ்ருதி சக்தி மேல் இருக்கும் கோவத்தை காட்டினார். அதே போல் தருண் வருண் மீது கோவத்தில் இருந்தார். பின் வருணுக்கு மாத்திரை கொடுக்க ஷீலாவிடம் கேட்டார் சக்தி. அந்த மாத்திரை இருக்கும் இடத்தை சக்தி கவனித்தார். பின் அவர் சென்ற பின் ஸ்ருதி வருண் சாப்பிடும் மாத்திரைக்கு பதில் வேறு மாத்திரை நாளை மறுநாள் வந்து விடும் என்று ஷீலாவிடம் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…