Mouna Ragam 2 Today Episode | 07.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.06.2022

Mouna Ragam 2. 07.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா வீட்டு வாசலில் நின்றார். ஆனால் மல்லிகா அவர் மீது கோவத்தில் இருந்தார். எப்படி என் மகளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பலாம் என்று கேட்டார். ஆனால் வருனுக்கு ஒன்றும் புரியவில்லை. விவாகரத்து நோட்டீஸ் நான் அனுப்பவில்லை என்று கூறினார். ஆனால் அவர் பேச்சை அங்கு யாரும் கேட்கவில்லை. மேலும் அவரை பேச விடாமல் பழனி தடுத்தார். கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். சதயாவால் எதையும் தடுக்க முடியவில்லை. உடனே வருண் தருனுக்கு அழைத்து பேசினார். கோவாவின் உச்சத்தில் கத்தினார். யாரை கேட்டு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது என்று கேட்டார். நான் unnidamo இல்லை அப்பாவிடமோ எனக்கு விவாகரத்து வாங்க வேண்டும் என்று கேட்டேனா என்று கத்தி விட்டு பதிலுக்கு எதிர் பார்க்காமல் வைத்தார். உடனே தருண் இந்த விஷயத்தை வீட்டில் அனைவர் முன்னிலையிலும் கூறினார். ஷீலா இப்படி ஒரு வேளை செய்தது தெரிய வந்ததும் மனோகர் கோவத்தில் கொந்தளித்தார். யாரை கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் என்று கேட்டார். ஆனால் ஷீலாவுக்கு சொல்ல எந்த பதிலும் இல்லை. மனோகர் ஷீலாவின் நோக்கம் தவறாக இருக்கிறதோ என்று நினைத்தார். அதனால் வீட்டை விட்டு வெளியே போய் விடு என்றும் கூறினார். ஷீலா மன்னிப்பு கேட்டு மனோகர் அதை காது கொடுத்து கேட்கவே இல்லை. வருண் சத்யாவை பிடிப்பதால் உனக்கு என்ன அப்படி ஒரு சந்தோசம்? அப்படி என்ன உனக்கு லாபம் என்று கேட்டார். ஆனால் அதற்கு ஷீலா வருண் நல்லதுக்காக தான் செய்தேன் என்றார். ஆனாலும் கோவத்தில் மனோகர் அங்கு இருந்து கிளம்பினார். வருண் சத்யாவிடம் இந்த விவாகரத்து நோட்டீஸ் தான் அனுப்பவில்லை என்று கூற வேண்டும் என்று நினைத்தார். அதனால் எங்கும் கிளம்பாமல் சுகுமாரன் வீட்டிலேயே தங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author