மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இருவரது திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் மணமக்கள். அவர்களை சத்யா ஆரத்தி எடுத்து வரவேற்றார். ஆனால் அந்த ஆரத்தியை ஸ்ருதி தட்டி விட்டார். மனோகர் அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். நீங்கள் இருவரும் விரும்பியதால் தான் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டேன் அதற்காக நீ என்ன செய்தாலும் இங்கு யாரும் கேட்க மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம் என்று எச்சரித்தார். அதற்கு ஸ்ருதி, சத்யா ஆரத்தி எடுப்பது படிக்கவில்லை என்று கூறினார். மனோகர், சதயாதான் இந்த வீட்டின் மூத்த மருமகள் அவளுக்கு தனி மரியாதை இருக்கு அதனால் பார்த்து நடந்ததுகொள் என்றார். இதை கேட்டதும் ஸ்ருதி மீண்டும் எரிச்சல் அடைந்தார். பின் வீட்டிற்குள் வந்ததும் மணமக்களுக்கு பால் பழம் கொடுத்தார்கள். ஆனால் எதிலுமே தருண் விருப்பம் இல்லாமல் இருந்தார். இதை கவனித்த மனோகர், வருண் சத்யாவின் விசாரித்தார். அவர்களும் அது இந்த திருமணம் அவசரமாக நடந்ததால் அப்படி இருப்பான், சரி ஆகி விடுவான் என்றனர். பின் ஸ்ருதி தருண் இருவரும் தங்கள் அறைக்கு வந்தார்கள். தருண் இடம் தான் இவளோ சந்தோசமாக இருப்பதாக ஸ்ருதி கூறினார். ஆனால் அதை தருண் கண்டுகொள்ளவில்லை. அவர் உள்ளே சென்று உடை மாற்றிக் வெளியே கிளம்பினார். ஸ்ருதிக்கு வருத்தமாக இருந்தது. பின் ஷீலாவிடம் சென்று சத்யா பேரை கேட்டல் எரிச்சலாக இருப்பதாக கூறினார். வருண் சத்யா இருவரும் புது மணதம்பதிக்கு முதல் இருவுக்கான ஏற்பாடுகள் செய்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…