Mouna Ragam 2 Today Episode | 08.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 08.03.2022

Mouna Ragam 2. 08.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் ஸ்கூல் திறப்பு விழா களை கட்டியது. கார்த்திக் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின் கார்த்திக் சத்யாவின் திறமை, பாட்டு பாடும் விதம் குறித்து புகழ்ந்து பேசினார். பின் வருண் பேச ஆரம்பித்தார். இந்த ஸ்கூல் மிகவும் ஒரு திறமையான ஒரு நபரால் தான் நடக்க போகிறது என்று சத்யாவை பற்றி பெருமையாக பேசினார். ஆனால் இடையில் தருண் நிறுத்தி, இந்த ஸ்கூலை ஸ்ருதி தான் எடுத்து நடத்த போகிறார் என்று அனைவர் முன்னிலையிலும் கூறினார். இதை கேட்ட வருண், சத்யா, மனோகர், ஷீலா என குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சியில் நின்றார்கள். மனோகர் இது சத்யாவுக்கு வருண் பார்த்து பார்த்து செய்தது இது எப்படி ஸ்ருதிக்கு கொடுக்க முடியும் என்று கத்தினார். ஆனால் தருண் ஸ்ருதியும் உங்கள் மருமகள் தானே என்று பதில் சொன்னார். இதை பார்த்த வருண் சுக்கு நூறாக உடைந்து போனார். இதற்கான காரணம், ஸ்ருதி தருணிடம் தனியாக பேசியது தான். ஸ்ருதி மீண்டும் எனக்கு தான் இந்த ஸ்கூல் என்று சொல்லவில்லை என்றால் சத்யாவை தான் நீ காதலிதாய் என்ற விஷயத்தை மேடையில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி உள்ளார் ஸ்ருதி. இதற்கு பயந்த தருண் வேறு வலி இன்றி ஸ்ருதி சொன்னபடி கேட்டு அதே பொல் செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author