Mouna Ragam 2 Today Episode | 08.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 08.04.2022

Mouna Ragam 2. 08.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நெருப்பை பார்த்து அலறி பின் டாக்டரை வர வைத்து அவரை தூங்க வைத்தார்கள். இதை பார்த்து மல்லிகா தன் மகளின் வாழ்க்கை இப்படி கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறதே என்று வருந்தினார். இந்த வாழ்க்கை வேண்டாம், நீ என்னோடு வந்து விடு என்று கூறினார் மல்லிகா. ஆனால் சத்யா அதற்கு வர முடியாது என்றார். இது சீக்கிரமே சரி ஆகி விடும் என்று கூறினார். ஆனால் மல்லிகாவால் அதை ஏற்க முடியவில்லை. டாக்டர் வருண் உடல் நிலையை பரிசோதித்து பின் பெரிய பாதிப்பு எதும் இல்லை என்று கூறினார். அவர் கொடுக்கும் மாத்திரையை மட்டும் போதும் என்றார். ஷீலா சுந்தரி மூலம் வருண் பிரச்சனையை சத்யா ஊர்காரர்கள் முன் கூற வைத்தார். மேலும் வருண் ஏற்கனவே இது போல் ஒரு முறை சத்யாவை அடுத்து தள்ளிவிட்டு ஹாஸ்பிடல் செல்லும்படி ஆகிவிட்டது என்று மேலும் பிரச்சனையை பெரிதாக்கினர். தருண் வருண் நிலையை பார்த்து வருந்தினார். அவரை சமாதானம் செய்வது போல் பேசி நடித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க …

About Author