Mouna Ragam 2 Today Episode | 08.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 08.08.2022

Mouna Ragam 2. 08.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தான் என்ன சொன்னாலும் யாருமே நம்பும் நிலையில் இல்லை என்று தெரிந்து கொண்டார். அதனால் இனி நடித்து தான் கார்த்திக்கை சென்னை அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார். உடனே மல்லிகாவிடம் தன் அம்மாவின் நிலையை கூறினார். மேலும் மல்லிகாவின் இரக்க குணம் தெரிந்து அவரிடம் நடிக ஆரம்பித்தார். என் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அது கார்த்திக் சென்னைக்கு வந்தால் தான் என்று கூறினார். ஆனால் இரண்டு நாளில் மீண்டும் அப்பாவை அனுப்பி வைக்கிறேன் என்று பொய் சொன்னார். என் அம்மாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினார். பின் சக்தி தனியாக இருக்கும்போது அவரிடமும் நடிக்க ஆரம்பித்தார். தன் அம்மாவின் நிலையை நீயே பார் என்று வீடியோ கால் செய்து நேரடியாக காட்டினார் ஸ்ருதி. இதனால் சக்தியும் சற்று மனம் உருகினார். மேலும் தருண் கார்த்திக் இடம் சென்னை சென்றால் தான் காதம்பரியை காப்பாற்ற முடியும் என்று கூறினார். ஆனால் கார்த்திக் அதை பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் மல்லிகாவே கார்த்திக் இடம் அவர் காதம்பாரி குணமடைய ஊருக்கு செல்வதே நல்லது என்று கூறினார். சக்தியும் காதம்பரிக்கு உண்மையிலேயே உடம்பு சரி இல்லை என்றும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author