Mouna Ragam 2 Today Episode | 08.11.2022 | Vijaytv
Mouna Ragam 2. 08.11.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் இங்கு தேடியும் மல்லிகா இருக்கும் இடம் பற்றி தெரியவில்லை என்று வீட்டுக்கு திரும்பினார். கார்த்திக் அவரது அறையில் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் இருந்தார். கார்த்திக்கின் அம்மாவும் மல்லிகா இல்லாமல் என்னால் எதையும் சாப்பிட முடியாது என்று கூறினார். இதை பார்த்த சொர்ணம் மனம் உடைந்து போனார். இனியும் அடுத்தவரை நம்ப முடியாது, தானே களத்தில் இறங்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். நம் கையில் விஸ்வநாதன் குடுமி இருக்கும்போது, நாம் எதற்கு பயப்பட வேண்டும் என்று நினைத்தார். உடனே விஸ்வநாதன் வீட்டுக்கு கிளம்பி சென்றார். அங்கு விஸ்வநாதனை பார்த்து தனக்கு மல்லிகா வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவரும் தனக்கு மல்லிகா இருக்கும் இடம் தெரியாது, தனக்கும் மல்லிகா காணாமல் போனதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறினார். ஆனால் இதை நம்ப நான் ருக்மணி இல்லை, எனக்கு இப்போவே உண்மை தெரிய வேண்டும் இல்லை என்றால் இந்த ஸ்ருதியை பிறப்பு பற்றிய ரகசியத்தை வெளியே சொல்லி விடுவேன் என்றார். அதற்கு பயம் இருந்தாலும், தனக்கு அதை பற்றி தெரியவே தெரியாது என்று சொல்லி சொர்ணத்தை வெளியே அனுப்பினார். ஆனால் விஸ்வநாதன் சொர்ணத்தை பார்த்து பயப்படுவதை கவனித்த ஷீலா, இதற்கு பின்னால் எதோ ஒரு விஷயம் இருப்பதை கண்டு பிடித்தார். உடனே ஷீலா, சொர்ணத்தை பார்த்து பேசினார். எதற்காக விஸ்வநாதன் உன்னை பார்த்து பயப்பட வேண்டும் என்று விசாரித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…