Mouna Ragam 2 Today Episode | 09.02.2023 | Vijaytv

Mouna Ragam 2. 09.02.2023

Mouna Ragam 2. 09.02.2023

மெளன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி மற்றும் வருண் இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்து ஸ்ருதி கடுப்பு ஆனார். உடனே கஸ்தூரியை அழைத்து வந்து காட்டி கொடுத்து நல்ல பெயர் வாங்கலாம் என்று முயற்சி செய்தார். ஆனால் கஸ்தூரி வந்து பார்ப்பதற்குள் அகு இருந்தவர்களை காணவில்லை. சக்தியும் வருனும் சேர்ந்து பூஜை செய்து கொண்டு இருந்தார்கள். மேலும் கஸ்தூரி அவர்களை பார்த்து பெருமை கொண்டார். அவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்கிறார்கள் என்று நினைத்தார். அதே நேரம் காதம்பரி கார்த்திக் முன் தனக்கு காய்ச்சல் வந்தது போல் நடித்தார். ஆனால் அதை கார்த்திக் நம்புவதாக இல்லை. இவளுடன் வாழ்ந்த இத்தனை வருடங்களில் இவள் எப்போது நடிப்பாள், எப்போது குணமடைவாள் என்று எனக்கு தெரியும் என்று கூறினார் கார்த்திக். ஷாலினி அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பினார். நேரம் ஆகி விட்டது என்று சொர்ணம் வந்ததை கூட கவனிக்கவில்லை. இதனால் ஷாலினியை இன்று ஒரு நாள் தருண் காரில் செல்லட்டும் என்று கூறினார். ஆனால் மனோகர் இனி தினமும் இதில் செல்லட்டும் என்று கூறினார். இது ஸ்ருதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதை நிறுத்த தன்னால் முயன்ற வரை தருணை கிளம்ப விடாமல் செய்தார். ஆனால் தருண் அதற்கு காது கொடுத்து கேட்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author