Mouna Ragam 2 Today Episode | 09.06.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.06.2022

Mouna Ragam 2. 09.06.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தான் ஆரம்பித்த பிரச்சனையை தானே முடிப்பதற்காக தன் அப்பா மற்றும் அத்தை இருவரையும் அங்கு இருந்து கிளம்ப வைத்தார். ஆனால் அவருக்கே தெரியாமல் மனோகர் மற்றும் ஷீலா இருவரும் மல்லிகா வீட்டுக்கு சமாதானம் பேச வந்தார்கள். ஆனால் அங்கு ஷீலா பேசுவது எல்லாம் எப்படியாவது சத்யாவை விவாகரத்து செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினார். மனோகரும் ஷீலாவை அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறியும் அவர் கேட்கவில்லை. மேலும் பிரச்சனையை பெரிதாக்கவே நினைத்தார். மேலும் ஷீலா இப்படி பேசுவதால் பழனி மற்றும் அவரது மனைவியும் கோவத்தில் பேச ஆரம்பித்தார்கள். கடைசியில் சத்யா விவாகரத்து வாங்கினால் உங்களுக்கு நல்ல லாபம், கோடி கணக்கில் ஜீவனாம்சம் வாங்கலாம் என்று திட்டம் போட்டு இப்படி செய்வதாக கூறினார் ஷீலா. இதை கேட்ட மல்லிகா கோவத்தில் கொந்தளித்தார். உங்கள் காசு பணம் எதுவும் தேவை இல்லை என்று கூறினார். சற்று நேரத்தில் வருண் அங்கு வந்தார். அவர் மனோகர் மற்றும் ஷீலா மீது கோவம் கொண்டார். யாரை கேட்டு இங்கு பேச வந்தீர்கள் என்று கேட்டார். நானே என் பிரச்சனையை சரி செய்துகொள்வேன் என்று அவர்களை கிளம்ப சொன்னார். மேலும் மனோகர் கொடுத்த பணத்தையும் வாங்கவில்லை வருண். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author