Mouna Ragam 2 Today Episode | 09.08.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா ஸ்ருதி பேசியதை கேட்டு மனம் மாறினார். உடனே கார்த்திக் மற்றும் அவரது அம்மாவிடம் அதை பற்றி பேசினார். காதம்பரி இந்த நிலையில் இருக்கும்போது கார்த்திக் சென்னையில் அவர் கூடவே இருப்பது தான் நல்லது என்று கூறினார். ஆனால் கார்த்திக் தனக்கு அதில் விருப்பம் இல்லை, அங்கு இருந்தால் எனக்கு நிம்மதியே இல்லை என்றும் கூறினார். மேலும் கார்த்திக்கின் அம்மாவும் அவரை அங்கு அனுப்ப விருப்பம் இல்லை என்றார். ஆனால் மல்லிகா மீண்டும் அவர் இங்கு இருப்பது சரி அல்ல என்று கூறினார். அப்போது கார்த்திக் தன்னை பற்றி யோசிக்கவே மாட்டாயா? தான் அங்கு சென்றால் நிம்மதியே இல்லாமல் தான் இருப்பேன் என்று கூறினார். ஆனால் நீயும் சக்தியும் கூறியதற்காக உங்கள் விருப்பத்துக்காக சென்னை கிளம்புகிறேன் என்று கூறினார். உடனே மல்லிகா வீட்டில் அனைவரையும் அழைத்து அவரின் முடிவை கூறினார். ஆனால் அதை கேட்ட பழனி, சொர்ணம், வருண் என்று அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பழனி கோவம் கொண்டார். மீண்டும் இந்த தவறை செய்யாதே, ஸ்ருதி பொய் சொல்லி நாடகம் போடுகிறார் என்று கூறினார். ஆனால் மல்லிகா தன் முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் வேறு வழி இல்லாமல் அனைவரும் ஒத்துக்கொண்டார்கள். ஸ்ருதிக்கு அதை கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தார். சக்தியும் தானும் அப்பாவுடன் சேர்ந்து வருவதாக கூறினார். மேலும் அவரை இரண்டு நாளில் மீண்டும் இங்கு அழைத்து வந்து விடுவேன் என்றும் கூறினார். அதற்கு ஸ்ருதி , அவள் என்ன முடிவு எடுப்பது என் அப்பாவை அழைத்து செல்ல அவள் எதற்கு அனுமதி தர வேண்டும் என்று கத்தினார். பின் சற்று நேரத்தில் அனைவரும் சென்னைக்கு கிளம்பினார்கள். சொர்ணம் சக்தி வருண் மூவரும் கார்த்திக் உடன் கிளம்பினார்கள். கார்த்திக்கின் அம்மா வரவில்லை என்று மல்லிகா கூடவே இருந்து விட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…