Tamizhum Saraswathiyum 2 Today Episode | 09.12.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 09.12.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நடேசன் தனக்கு உடம்பு மிகவும் சோர்வாக இருக்கிறது என்று கூறினார். மேலும் நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது சுடு தண்ணீர் வேண்டும் என்று கூறினார். சரஸ்வதி அதையும் செய்து கொடுத்தார். ஆனால் அந்த நேரம் பார்த்து அர்ஜுன் குடும்பமே வெளியே pog வேண்டும் என்று கிளம்பினார்கள். வாடகை வண்டி பிடித்து தர வேண்டுமா என்று கேட்டார் ராகினி. ஆனால் அதை மறுத்துவிட்டு தங்களோடு நடேசன் வந்தால் வசதியாக இருக்கும் என்று கூறினார்கள். அவரே வண்டி ஓட்டிவிட்டு கடைகள் விவரம் எல்லாம் அவருக்குதனே தெரியும் என்று நடேசனை ஒரு டிரைவர் போல் நடத்தினார்கள். பின் வீட்டுக்கு திரும்பியவர்கள் துணிக்கடை, நகைக்கடை என்று எல்லா இடங்களுக்கும் சென்று மூன்று அரை லட்சம் செலவு செய்ய வைத்தார்கள். வீட்டுக்கு வந்ததும் கோதை மிகவும் கோவம் கொண்டார். அடித்தவர் வீட்டில் இருந்து இப்படி செய்வது முறை இல்லை என்று வசுந்தரா, சரஸ்வதி அனைவருமே ராகினியிடம் மறைமுகமாக கூறினார்கள். பின் ராகினி அர்ஜுனை பார்க்க உடனே கம்பேனிக்கு கிளம்பினார். அங்கு சென்றதும் அவரது குடும்பம் செய்ததை எடுத்து தன்மையாக கூறினார். இது போல் நடப்பது சரி இல்லை என்று. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…