மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் இருக்கும் நிலையை பார்த்து சக்தி நொந்து போனார். பின் அவருக்கு மயக்கம் வந்ததால் சக்தி அவரை தாங்கி பிடிக்க வந்தார். உடனே சக்தியை பார்த்த வருண் மறுபடியும் அவரை பார்த்து அலற ஆரம்பித்தார். இதனால் அங்கு இருந்த டாக்டர்கள் சக்தியை உடனே வெளியே அனுப்பினார்கள். சக்தியை பார்த்தாலே நீ எதற்கு இங்கு வந்தாய்? இங்கே வராதே! வெளியே போ என்று கத்தினார். பின் அவர் கண்ணில் படாமல் இருக்கும்படி சக்தியை எச்சரித்தார்கள். அவர் முழுமையாக குணமடையும் வரை அவர் அருகில் செல்ல வேண்டாம் என்று கூறினார்கள். அதே நேரம் தருண் மனோகர் இடம் நல்ல பெயர் வாங்க அவர்களுக்கு சாப்பாடு, காபி என்று கொடுத்தார் ஸ்ருதி. ஆனால் அவர்கள் ஸ்ருதியை மதிக்கவே இல்லை. அதனால் உடனே கஸ்தூரியை வீட்டுக்கு அழைத்து வந்து தன் பெயரை நிலை நாட்ட நினைத்தார். உடனே ருக்மணிக்கு அழைத்து பேசினார். கஸ்தூரியை அழைத்து வர வேண்டும் என்று கூறினார். அதற்கான வேலையை ஆரம்பித்தார் ருக்மணி. ஷீலாவிடம் கஸ்தூரி இருக்கும் வீட்டுக்கு எப்போ செல்வாள், அங்கு வேலை செய்பவருக்கு குடும்பம் எதுவும் இல்லையா என்று விசாரித்தார். இதனால் அவர் எப்போது வெளியே செல்வார் எப்போது திரும்ப வருவார் என்று அனைத்தையும் விசாரித்து வைத்தார். பின் அதற்கு எர்ப்ப திட்டம் போட்டு ஸ்ருதியை அழைத்து சென்றார். பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து கஸ்தூரியை அழைத்து சென்றார்கள். நேராக மனோகர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….