Mouna Ragam 2 Today Episode | 10.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 10.03.2022

Mouna Ragam 2. 10.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நடந்ததையே நினைத்து வருத்தத்தில் இருந்தார். இதை பார்த்த சத்யா அவரை சமாதானம் செய்ய பேச ஆரம்பித்தார். காபி டீ எதாவது வேண்டுமா என்று கேட்டார். ஆனால் வருண் அதில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்தார். அந்த நேரம் பார்த்து தருண் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டார். ஆனால் வருண் அவர் மீது தீராத கோவத்தில் இருந்தார். நீ எனக்கு செய்தது பெரிய நம்பிக்கை துரோகம் என்றார். நான் இவளோ ஆசையாக இந்த ஸ்கூல் ஆரம்பித்தேன், ஒரு ஒரு விஷயத்தையும் சத்யாவுக்காக பார்த்து பார்த்து செய்தேன். ஆனால் எல்லாமே கூடவே இருந்து பார்த்த நீயே என்னை ஏமாற்றிவிட்டாய் என்று கோவம் கொண்டார். பின் வருண் இடம் தனியாக சத்யா பேசினார். செல்லமாக அவரிடம் சண்டை பொட்டர். தான் தன் அம்மா வீட்டுக்கே போக போவதாக கூறினார். பின் வருண் மனம் மாறும்படி பேசினார். வருண் பெயரை வைத்து கூப்பிட்டு பேசி அவரை அந்த வருத்தத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்தார் சத்யா. ஸ்ருதி யிடம் ஷீலா பேசிக்கொண்டு இருந்தார். ஷிலாவுக்கு எதுவுமே புரியவில்லை, ஆனால் வீட்டில் நிம்மதி இல்லை என்பதால் சந்தோசமாக இருந்தார். ஆனால் இதற்கு காரணம் ஸ்ருதி தான் என்று அவருக்கு தெரிய வந்தது. உடனே எப்படி எனவும் கேட்டார். அதற்கு ஸ்ருதி எல்லாம் சத்யா விஷயத்தை வைத்து மிரட்டி தான் பேச வைத்தேன் என்றார். பின் சத்யாவை பார்த்து ஸ்ருதி திமிராக ஒரே நாளில் எப்படி இந்த ஸ்கூல் என் பெயருக்கு மாறியது பாத்தியா என்று கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author