Mouna Ragam 2 Today Episode | 11.01.2022 | Vijaytv
Mouna Ragam 2.11.01.2022
மௌன ராகம் தொடரில் இன்று, சுருதியை காணவில்லை என்று தன் காவல் துறை நண்பரிடம் கார்த்திக் கூறி இருந்தார். அவர் இன்று வீட்டுக்கே வந்து விவரமாக கேட்டு விசாரித்தார். எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும்? இதற்கு முன்னால் இப்படி அவர் செய்து இருக்கிறாரா? வீட்டில் வேறு எதும் தொந்தரவா? இல்லை யாரும் கடத்தும் அளவுக்கு பகை எதும் உண்டா? என்று அவர் பல கோணங்களில் விசாரித்தார். அப்போது ருக்மணி சுருதியின் காதல் விஷயம் பற்றி கூறினார். தருண் தான் அவள் காதலித்த பையன் அவனுக்கு தெரிய வாய்ப்பு இருக்கு என்று இந்த வழக்கின் திசையை திருப்பினார். கார்த்திக் மனோகர் வீட்டை இதில் இழுக்க வேண்டாம் என்று கூறினார் ஆனால் அதை ருக்மணி கெட்டபாடு இல்லை. மீண்டும் தனக்கு தருண் மேல் தான் சந்தேகம் என்று கூறினார். இதனால் மனோகர் வீட்டுக்கு நான் போய் விசாரிக்க போவதாக கூறினார் காவல் துறையினர். அவர் கிளம்பும்போது ருக்மணி மற்றும் காதம்பரி இருவரும் மனோகர் வீட்டுக்கு கில்பினார்கள். அங்கு சென்று தருண் மற்றும் மனோகர் இடம் அவர் விசாரித்தார். அப்போது தான் தருணக்கு சுருதி கனாவில்லை என்ற விஷயமே தெரிகிறது. பின் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார் தருண். அடுத்து என்ன நடந்தது? காதம்பரி மற்றும் ருக்மணி அடுத்து என்ன செய்தார்கள். காணொளியை பார்க்க…