Mouna Ragam 2 Today Episode | 11.02.2022 | Vijaytv
Mouna Ragam 2.11.02.2022
மௌன ராகம் தொடரில் இன்று, தருண் ஸ்ருதி இருவரையும் விருந்துக்கு அழைக்க ருக்மணி மற்றும் காதம்பரி இருவரும் வந்தார்கள். ஆனால் தருண் தனக்கு வேலை இருப்பதாக கூறினார். வீட்டில் அனைவரும் இப்போ தானே திருமணம் ஆனது போய் வா என்று கூறியும் அவர் அதை கேட்கவில்லை. பின் வருண் மற்றும் சத்யா இருவரும் சேர்ந்து தருண் மனதை மாற்றினார்கள். கார்த்திக் இந்த திருமணத்தை பார்க்கவும் இல்லை, ஸ்ருதிக்கு ஆசிர்வாதம் செய்ய அவரும் ஆவலோடு எதிர்பார்த்து இருப்பார் என்று எடுத்து கூறினார். அதை எல்லாம் கேட்டு தருண் மனம் மாறினார். தான் விருந்துக்கு செல்வதாக ஒத்துக்கொண்டார். பின் ஸ்ருதியிடம் இந்த விஷயத்தை சந்தோசமாக சத்யா கூறினார். ஆனால் அதை ஸ்ருதி தனக்கு அவமானமாக நினைத்தார். தன் அம்மா பாட்டி கூப்பிடும்போது வரமாட்டேன் என்று கூறியவன் இப்பொழுது இவர்களுக்காக ஒத்துக்கொண்டதை அவமானமாக நினைத்தார். இப்படி இவர்கள் சொல்லி இந்த விருந்துக்கு நாம் செல்ல அவசியம் இல்லை என்று கூறினார். ஆனால் சத்யா அவரை விடாமல் அதெப்படி விருந்துக்கு செல்லாமல் இருக்க முடியும். நீ உன் அப்பாவிடம் இன்னும் ஆசிர்வாதம் வாங்கவில்லை அது உனக்கு நினைப்பு இல்லையா என்று அதிகாரமாக கேட்டார். அவரால் கல்யாணத்திற்கும் வரமுடியவில்லை. அதனால் இப்போதாவது போய் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று கூறினார். ஸ்ருதிக்கு சத்யாவின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பின் தருண் விருந்துக்கு வருவதாக ஒத்துக்கொண்டார். பின் அவர்களை கிளம்பி வர சொன்னார்கள். கார்த்திக் மணமக்களை பார்த்ததும் சந்தோசத்தில் கண் கலங்கினார். பின் அவர்களை ஆசிர்வாதம் செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…