Mouna Ragam 2 Today Episode | 11.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.07.2022

Mouna Ragam 2. 11.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் பாட்டுப் போட்டிக்கு தயார் ஆனார்கள். அங்கு இருந்த அனைவர் முகத்திலும் பதட்டம் தெரிந்தது. பின் சத்யா பாட ஆரம்பித்தார். அவரது பாட்டை பாடி முடித்ததும் வருண் பாடும்படி அனைவரும் கூறினார்கள். ஆனால் வருண் பதட்டம் அடைந்தார். மேலும் தன்னால் பாட முடியாது என்று சொன்ன அனைத்து நினைவுகளையும் நினைத்து பார்த்தார். வருண் இடம் 5 நிமிடம் பாட வேண்டும் என்று சவால் விட்டதில் இருந்து, சத்யாவுக்கு பாடி அசிங்கப்பட்டது, பின் மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்டது, பின் அரை மணி நேரம் பாடி சக்தியோடு போட்டி போட வேண்டும் என்று கூறியது என்று பழனி பேசிய அனைத்தையும் நினைத்து பார்த்தார். அத்தனையும் நினைத்து பார்த்து கடைசியில் பாடவும் ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் ஆச்சர்யத்தில் ஊரே பார்த்தது. மனோகர் பெருமையில் மிதந்தார். கார்த்திக் மேலும் வருணுக்கு உற்சாகம் கொடுத்தார். ஷீலா மற்றும் ஸ்ருதி இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள். ஆனால் ஸ்ருதி தன ஏற்பாடு செய்த ஆளை பார்த்து இந்த போட்டி முடிந்ததும் சத்யாவை கொல்ல வேண்டும் என்று கண்ணை கமித்தார். ஆனாலும் போட்டி நடக்க ஆரம்பித்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author