Mouna Ragam 2 Today Episode | 11.08.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் பல நாட்கள் கழித்து மீண்டும் மனோகர் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை வருவதை பார்த்து மனோகர் மிகவும் சந்தோசம் அடைந்தார். மேலும் சொர்ணத்தையும் வரவேற்றார். ஆனால் ஷீலாவுக்கு அவரை பார்த்து எரிச்சல் தான் வந்தது. சொர்ணம் வீட்டை பார்த்து ஆச்சரியப்பட்டார். வீடு ஒரு மாளிகை மாதிரி இருக்கிறது என்று கூறினார். ஆனால் சக்தி மட்டும் வரும் வழியில் யாரோ ஒருவரை பார்த்ததால் அது யார் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். கொஞ்ச நேரம் அதை பற்றியே யோசித்தார். சற்று நேரத்தில் கார்த்திக்கை குத்திய ஆளின் உருவம் இப்படி தான் இருந்தது என்று யோசித்தார். பின் உடனே அந்த விஷயத்தை மனோகர் மற்றும் வீட்டில் அனைவரிடமும் கூறினார். அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்து மீண்டும் வேறு எதாவது நியாபகத்தில் இருக்கிறதா என்று கேட்டார்கள். இதனால் அவன் வைத்து இருந்த வண்டி எண் நினைவில் உள்ளது என்று கூறினார். Melumcadhai வைத்து அந்த வண்டி வைத்து இருப்பவரின் புகைப்படம் கிடைத்தது. அதை பார்த்ததும் சக்தி இவனே தான் என்று உறுதி செய்தார். ஆனால் அவன் கார்த்திக் வீட்டின் அருகில் என்ன செய்கிறான் என்று யோசித்தார்கள். அப்போது சொர்ணம் தான் அவன் கண்டிப்பாக ருக்மணியை பார்க்க தான் வந்து இருப்பான் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…