மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகாவை அவரது வீட்டில் விட்டு பின் கார்த்திக் கிளம்பினார். அந்த சமயம் ஊர்க்காரர்கள் அவரை பார்த்து ஒன்று கூடினர். அவரின் பாடல்களை தாங்கள் மிகவும் ரசித்து கேட்போம் என்றும், அவரின் தீவிர ரசிகர்கள் எனவும் கூறினார்கள். பின் மல்லிகாவை எதற்கு இவர் கூட்டி வந்து விடுகிறார் என சந்தேகம் எழுந்தது. சுதாகர் அங்கு வந்தார். பின் அனைவரும் கேட்ட கேள்விக்கு பதில் அவரே கூறினார். இவர்தான் சத்யாவின் அப்பா என கூறினார். அனைவரும் அதிர்ச்சியோடு சந்தோசமும் அடைந்தனர். வருண் சத்யாவின் தேனிலவு பயணம் நின்று போனதால் மறுபடியும் போய் வருமாறு கூறினார் தருண். பின் இருவரும் பேசி முடிவு செய்தனர். ஆனால் அந்த ஊர் கொடைக்கானல் என முடிவு செய்தனர். தருண் தான் வரவில்லை என அப்பாவிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் வருண், நீயும் என்னோடு வருமாறு கூறினார். தருண் ஒத்துக்கொண்டாரா? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….