Mouna Ragam 2 Today Episode | 12.11.2021 | Vijaytv
mounaragam2.12.11.2021
மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் ஊரை சுற்றி பார்த்தனர். அப்போது வருண் சத்யாவை காதலோடு பார்த்தார். சத்யாவுக்கு முத்தம் கொடுக்க நினைத்தார். அந்த சமயம் ஷீலா வருணுக்கு அழைத்தார். நலம் விசாரிப்பது போல முதலில் பேசினார். வருண் சத்யா என்னை மிகவும் நன்றாக பார்த்துக்கொள்கிறாள் என்று கூறினார். இதை கேட்ட ஷீலா, பரவாயில்லை காசுக்காக உன்னை திருமணம் செய்ததால் அவள் உன்மீது பாசமாக இருக்கமாட்டாள் என நினைத்தேன் என்று கூறினார். இதை கேட்ட வருண் அதிர்ந்து போனார். பின் சத்யாவின் அம்மா ஆபரேஷன் செய்ய அண்ணன் தான் பணம் கொடுத்து உதவினர். அதனால் தான் இந்த கல்யாணமே நடந்தது என்று கூறினார். இதை கேட்ட வருண் சத்யா மீது கோபம் கொண்டார். உடனே சென்னை கிளம்பவேண்டும் என்று கூறினார். தருனையும் கிளம்ப வேண்டும் என்று கிளப்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….