Mouna Ragam 2 Today Episode | 12.12.2022 | Vijaytv
Mouna Ragam 2. 12.12.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி கஸ்தூரியை அலங்கரித்து கீழே அழைத்து வந்தார். அவரை பார்த்த மனோகர் மற்றும் தருண் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள். கஸ்தூரியை பார்த்து மனோகர் கதறி அழுதார். இத்தனை வருடங்களாக எங்கு இருந்தார் என்று புலம்பினார். நீ இல்லாமல் இந்த வீட்டில் எப்படி இருந்தோம் என்று கதறினார். ஆனால் கஸ்தூரி சுயநினைவு இல்லாமல் எந்த பேச்சும் இல்லாமல் இருந்தார். பின் ஸ்ருதி அவர் ரோட்டில் சுயநினைவு இல்லாமல் நடந்தது சென்றதாகவும் அதை யாரோ ஒருவர் ஸ்ருதிக்கு அழைத்து சொன்னதாகவும் கூறினார். அதனால் தான் அந்த இடத்துக்கு உடனே சென்று அவரை கண்டுபிடித்து கூட்டி வந்ததாக கூறினார். பின் அதையும் நம்பி கஸ்தூரிக்கு இந்த நிலமையா என்று கதறினார் மனோகர். தருண் தன்னை யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். நான்தான் உங்கள் மகன் என்று கண் கலங்கினார். அவரை கட்டிப்பிடித்து அழுதார். ஆனால் எதற்குமே கஸ்தூரி எந்த பதிலும் சொல்லாமல் சிலை போல் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….