Mouna Ragam 2 Today Episode | 13.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.09.2022

Mouna Ragam 2. 13.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி எப்போதும் போல் வருண் சாப்பிடும் மாத்திரையை வாங்க வந்தார். அப்போது ஷீலா வேற இடத்துக்கு மாத்திரையை மாற்றி வைத்து இருப்பதை பார்த்தார் சக்தி. அதை கேட்கவும் செய்தார். உடனே ஷீலா கோவம் கொண்டார். நீ மீண்டும் வந்து இந்த மாத்திரையை கேட்பாய் என்று தான் இடத்தை மாத்தி வைத்தேன் என்று கோவமாக பேசினார். இதனால் மேலும் சந்தேகம் அதிகரித்தது சக்திக்கு. ஒரு சின்ன மாத்திரையை நான் பார்க்கவே கூடாது என்று எதற்கு மறைத்து வைக்க வேண்டும் என்று யோசித்தார். மேலும் இதை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தார். அன்று வருண் அந்த மாத்திரையை சாப்பிடும் போது இன்று வேறு மாதிரி இருக்கிறதே என்று கூறினார். இதனால் சந்தேகத்தில் அவரை அந்த மாத்திரையை சாப்பிட வேண்டாம் என்று கூறினார். அடுத்த நாள் அவருக்கு பார்க்கும் மருத்துவரை சந்திக்கவும் திட்டம் போட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author